புதிய உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா; போராடி வீழ்ந்த மேற்கிந்திய தீவுகள்
abhishek sharma record as fastest 2000 t20 runs: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது T20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
சர்வதேச T20 போட்டிகளில், அதிவேகமாக 2,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது T20 போட்டி நேற்று இந்தோரில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 223 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக, அபிஷேக் சர்மா 69 ஓட்டங்களும், இஷான் கிஷன் 37 ஓட்டங்களும் குவித்தனர்.
223 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில், அதிகபட்சமாக கமில் பூரான் 42 ஓட்டங்களும், ஹெட்மயர் 43 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்தியா தரப்பில், அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம், இந்திய அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா சாதனை
அதிரடியாக ஆடி, 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 69 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

18 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா, சர்வதேச T20 போட்டிகளில் அதிவேகமாக 2,000 ஓட்டங்களை என்ற சாதனையை படைத்துள்ளார்.
1,164 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 2,000 ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், 1024 பந்துகளில் 2,000 ஓட்டங்களை கடந்து அபிஷேக் சர்மா அந்த சாதனையை முறியடித்துள்ளார்.