கருவை கலைத்துவிட்டு இளம் பெண் செய்த செயல்: சிறைக்கு செல்லும் தாயாரும் மகளும்
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் கருக்கலைப்புக்கு என மாத்திரைகள் எடுத்துக்கொண்டதுடன், தாயாரின் உதவியுடன் கழிவுகளை அப்புறப்படுத்திய விவகாரத்தில் சிறை தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்.
90 நாட்கள் சிறை தண்டனை
நெப்ராஸ்கா மாகாணத்தை சேர்ந்த 19 வயதான Celeste Burgess தற்போது 90 நாட்கள் சிறை தண்டனையை அனுபவிக்க இருக்கிறார். 28 வாரங்கள் கர்ப்பிணியான அவர் மாத்திரைகள் உட்கொண்டு கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மகளுக்கு உதவியதாக கூறி, 42 வயதான Jessica Burgess தற்போது 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார். நெப்ராஸ்கா மாகாணத்தை பொறுத்தமட்டில் 12 வாரத்திற்கு மேல் கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
@norfolkdaily
கருக்கலைப்பு விவகாரம் தொடர்பில் ஜூன் 2022ல் அந்த தாயார் மற்றும் மகளிடம் பொலிசார் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடந்த போது நெப்ராஸ்கா மாகாணத்தில் 20 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டிருந்தது.
அப்போது 17 வயதேயான Celeste Burgess தமது 28 வார கருவை கலைக்க முடிவு செய்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளார். அதிகாரிகள் தரப்பிடம், குழந்தை இறந்து பிறந்ததாகவே Celeste Burgess அப்போது தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையில், Celeste Burgess கர்ப்பத்தின் மூன்றாவது மாதங்களில் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டார் எனவும், இது நெப்ராஸ்கா மாகாண சட்டத்தின்படி சட்டவிரோதமானது எனவும் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |