மக்களை அச்சுறுத்தும் ஏஒய்.4.2 வைரஸ்! டெல்டா வைரஸை விட ஆபத்தானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
ஏஒய். 4.2 என்ற வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. சீனாவில் கண்டுப்பிடிப்பட்ட வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. குறிப்பாக டெல்டா வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து ஏஒய்.4.2 வைரஸ் புதிதாக உருவெடுத்துள்ளது. டெல்டா வைரஸோடு புதிதாக உருமாறிய ஏஒய்.4.2 வைரஸை ஒப்பிட்டு பார்த்தால் பரவல் வேகம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சில ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வரவில்லை. டெல்டா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் ஏஒய்.4.2 வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் ஆபத்து குறித்து முழுமையாக தெரியவில்லை. ஆனால் இந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடு குறைவாகவும், டெல்டாவை விட 15 சதவீதம் வேகமாக பரவக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஏஒய்.4.2 வைரஸ் குறித்து பிரிட்டன் மருத்துவ ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.