சினிமாவை மிஞ்சும் திகில் கதை! மனிதர்களை சூறையாடும் மர்ம குகை.. நடுங்க வைக்கும் பின்னணி?
துருக்கியில் உள்ள கோவில் ஒன்றில் மனிதர்கள் மர்மமான முறையில் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு கீழே புதைந்து போன கோவில்களை தோண்டி சிதைந்து போன வரலாற்றை ஆராய்ச்சி செய்து மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் துருக்கி நாட்டின் Hierapolis நகரில் பழமையான கோவில் ஒன்றுள்ளது. இந்த கோயில் நரகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் இந்த கோவிலை சுற்றி பார்க்க சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்ததில்லை என்று கூறப்படுகின்றது.
மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகள், பறவைகள் என வாய் இல்லாத ஜீவன்களுக்கும் இதே கதி தான். இங்கு தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடப்பதால் இதனை நரகத்தின் நுழைவாயில் என்று சொல்லப்படுகின்றது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, கோயிலுக்கு அடியில் இருந்து விஷ கார்பன் டை ஆக்சைடு வாயு தொடர்ந்து வெளியேறி வருவதால் இங்கு செல்லும் மனிதர்கள், உயிரினங்கள் மூச்சு திணறி இறப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக 10 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடு இருந்தால் ஒரு நபர் வெறும் 30 நிமிடங்களில் இறக்கலாம். அனால் இந்த கோவிலில் 91 சதவீதம் விஷ வாய்வு உள்ளதால் உடனே இறக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது. விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்தாலும் அங்கு வசிக்கும் மக்கள் அந்த கோவிலில் பேய் இருப்பதாக இன்றும் நம்பி வருகின்றனர்.