ஹார்முஸ் விவகாரம்... அனைத்துத் தரப்பினரிடமும் தொடர்பில் உள்ளோம்: சீனா அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் தொடர்புகொண்டு பேசி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
தொடர்பில் உள்ளோம்
மத்திய கிழக்கு மோதலின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் வெளிவிவகார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உதவுமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து சீனாவுக்கு ஏதேனும் கோரிக்கை வந்துள்ளதா என்று அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள செய்தித்தொடர்பாளர் லின் ஜியான், தற்போதைய சூழல் குறித்து அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம்; மேலும், இச்சூழல் தணிந்து அமைதியடைவதை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்றார்.
போரை நிறுத்த வேண்டும்
மேலும், போர் தீவிரமடைவதையும், பரவலான பொருளாதாரப் பின்விளைவுகளையும் தடுக்கும் வகையில், அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்துவதாக லின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பின் கோரிக்கையை சீனா மறுத்திருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் ட்ரம்பின் நகர்வுகள் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில், சீனா அதிரடியாக நுழைந்துள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மட்டுமின்றி, சீனாவின் உளவுக்கப்பல்கள் ஈரானுக்கு உதவி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |