அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் கப்பலை குறிவைத்த ஈரானின் ஏவுகணைகள்
ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடாவில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
கல்லறையாக மாறும்
குறித்த தகவலை உடனடியாக மறுத்த அமெரிக்காவின் CENTCOM நிர்வாகம், தரவுகளை மட்டும் வெளியிட மறுத்துள்ளது. நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கியதாக ஈரானின் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன், நிலமும் கடலும் பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக மாறும் எனவும் ஈரானின் IRGC பதிவிட்டுள்ளது. ஆனால், கப்பல் தாக்கப்படவில்லை என்றும், ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களுக்கு தொடர்ந்து விமானங்களை அனுப்பி வருவதாகவும் CENTCOM நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஈரானின் Corvette கப்பல் ஒன்றை அமெரிக்கா தாக்கியுள்ளதாகவும், இந்தக் கப்பல் தற்போது ஓமன் வளைகுடாவின் சா பஹார் துறைமுகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றும் CENTCOM தெரிவித்துள்ளது.
அத்துடன், ஈரானின் ஆயுதப் படைகள், IRGC மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பாலிஸ்டிக் ஏவுகணை
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெபல் அலி துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கான வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ஒரு வணிகக் கப்பலை ஈரானின் நான்கு ட்ரோன்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தின் அப்துல்லா முபாரக் பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 ட்ரோன்களால் தாக்கப்பட்டது.
அதன் அனைத்து உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன, மேலும் ஏராளமான அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்களை மூழ்கடிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தற்போதைய புது வரவு என்றே பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2023 ஆம் ஆண்டில் செங்கடலில் ஏமனின் ஹவுதி படைகளால் அவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. இந்த ஏவுகணைகள் அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பல்களைத் தாக்கியதாக பல தகவல்கள் தெரிவித்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |