இந்தியரை மணந்துகொண்டதால் எதிர்கொள்ளும் நெருக்கடி... பட்டியலிட்ட வெளிநாட்டுப் பெண்
இந்தியரை திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டவர்கள் எதிகொள்ளும் நெருக்கடிகளை அமெரிக்கப் பெண் ஒருவர் பட்டியலிட்டுள்ளார்.
வாழ்க்கையை தொலைத்துவிட்டீர்கள்
குறித்த பெண்ணின் பதிவு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தியாவில் வாழ்ந்துவரும் அமெரிக்கரான ஜெசிகா, இணையத்தில் அவர் எதிர்கொள்ளும் அதிர்ச்சியூட்டும் மற்றும் புண்படுத்தும் கருத்துகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை கோரவே உங்கள் கணவர் உங்களை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கறுப்பான ஒருவரை திருமணம் செய்துகொண்ட உங்களுக்காக வருத்தப்படுகிறேன் என்பது போன்ற கருத்துகளை பலர் முன்வைத்துள்ளதாக ஜெசிகா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என பலர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
தாங்களும் எதிர்கொள்வதாக
எத்தனை பேர்கள் இதுபோன்ற அவமதிப்புகளை எதிர்கொண்டீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒருவகை நிறவெறி, இனவெறி, வெள்ளைத் தோல், மேற்கத்திய பாஸ்போர்ட் வழிபாடு உள்ளிட்டவையின் சிறு எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பலர் இதுபோன்ற சம்பவங்களை தாங்களும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்தியர்களுக்கு மட்டுமல்ல, மெக்சிகோ, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாட்டவர்கள் என்றாலே பலருக்கு நிறவெறியும் இனவெறியும் தலைதூக்கும் என ஜெசிகாவின் பதிவிற்கு பதிலளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |