இஸ்லாமியர் அல்லாதவர்களின் திருமணத்திற்கு அனுமதி! பிரபல இஸ்லாமிய நாடு அறிவிப்பு
பிரபல இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், தலைநகரமான அபுதாபி நெற்று வெளியிட்டுள்ள அரசாணையில், இஸ்லாமியர் அல்லாதவர்களின் திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
குறித்த ஆணையத்தில், அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் இஸ்லாமியர் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்துசெய்யவும் மற்றும் விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை கூட்டு முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த அரசாணை, விவாகரத்து பெறுபவர்கள் ஜீவனாம்சம் பெறுவதற்கும் வகை செய்கிறது. அபுதாபியில் முஸ்லிம் அல்லாத குடும்ப விவகாரங்களைக் கையாள புதிய நீதிமன்றம் ஒன்று நிறுவப்படும் என்றும் அந்த நீதிமன்றம் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த ஆண்டு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களில் மாற்றங்களை செய்தது. அதன் படி, திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகள், மது அருந்துதல், மற்றும் கெளரவக்கொலைகள் வழக்கில் பல்வேறு விதிகளை ரத்துசெய்தல் உட்பட பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
திறமை மற்றும் திறன்களுக்காக உலகில் அதிகம் விரும்பப்படும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலையை உயர்த்துவதற்கும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் உள்ள உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள்து.