திருமணம் செய்து கொள்ளலாமா? நேரலையில் கெஞ்சிய பயிற்சியாளர்: வீராங்கனை சொன்ன வார்த்தை
டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு அவரது பயிற்சியாளர் திருமண கோரிக்கை வைக்க அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அர்ஜென்டினா நாட்டுக்காக வாள்வீச்சு விளையாட்டில் களம் கண்டவர் மரியா பெலன் பெரெஸ் மாரிஸ். 36 வயது வீராங்கனையான இவர், ஹங்கேரி நாட்டின் அன்னாவிடம் 12 - 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறினார்.
தோல்வி குறித்து காட்சி ஊடகம் ஒன்றிற்கு மாரிஸ் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரது பயிற்சியாளர் Lucas Guillermo Saucedo, அவருக்கு பின்னால் நின்றபடி ‘திருமணம் செய்யலாமா?’ என்பதை சிறிய பேப்பரில் எழுதி சிம்பாலிக்காக கேட்க.
அதை படித்ததும் மகிழ்ச்சி பொங்க, இனி வாழ்க்கையில் இணைந்து பயணிக்கலாம் என சம்மதம் சொல்லியுள்ளார். 2010ல் பாரிஸ் நகரில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்ட போதும் Saucedo இதே கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஆனால் அப்போது அவர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டதுடன், சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே கோரிக்கையை Saucedo முன்வைக்க, பெரெஸ் மாரிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.