ஹிட்லரைப் போல சித்திரவதை முகாம்களை உருவாக்குகிறார் புடின்: உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றச்சாட்டு
தெற்கு உக்ரைனை ரஷ்யப் படைகள் சூறையாடியுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அங்குள்ள மக்களை கடத்தி ரஷ்யப் படையினர் சித்திரவதைக்குட்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தெற்கு உக்ரைன் ரஷ்ய சித்திரவதைப் படைகளால் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.
அங்கு புடின் சித்திரவதை முகாம்களை உருவாக்கியுள்ளதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ள ஜெலன்ஸ்கி, உள்ளூர் அரசுகளின் பிரதிநிதிகளை ரஷ்யப் படையினர் கடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் மனிதநேய உதவிகளைக் கூட ரஷ்யப் படையினர் திருடி, அங்கு பஞ்சத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் உணவுக்கூடை என அழைக்கப்பட்ட உக்ரைனில், இன்று மக்கள் உணவுக்காக நாய்களைக் கூட கொன்று சமைத்து உண்டு வருவதாக பதறவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியான ஸ்டாலினைப் போல, உக்ரைன் மக்களை பட்டினி போட்டுக் கொல்ல புடின் தயாராகி வருவதாக வரலாற்றாளர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.