ஹெல்த்கேர் நிறுவனத்தில் சாதிக்கும் லட்சிய பெண்மணி.. சொத்து மதிப்பு மட்டுமே ரூ.5,950 கோடி
அமெரிக்காவில் அதிகமான சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு தந்தையின் நிறுவன மதிப்பை ரூ.8500 கோடியாக மாற்றிய பெண்ணை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமீரா ஷா (Amira Shah). இவர், மும்பை மற்றும் அமெரிக்காவின் ஆஸ்டின் ஹெச்ஆர் காலேஜில் காமர்ஸ் மற்றும் எக்கனாமிக்ஸில் பட்டப்படிப்புகளை படித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தனது வேலையில் சம்பளம் திருப்தியை தராததால் கடந்த 2001 -ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்து தந்தையின் நிறுவனத்தில் பொறுப்பேற்றார். இவருடைய பெற்றோர்கள் அமீரா டாக்டர் சுஷில் ஷா, டாக்டர் துரு ஷா ஆவார்.
இவரது குடும்பம் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கினாலும் அதனை தேர்ந்தெடுக்காமல் பைனான்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் நிபுணர் ஆனார். அதற்காக ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் ஓனர் கம் பிரசிடெண்ட் மேனேஜ்மெண்ட் புரோகிராம் படிப்பை முடித்தார்.
பின்னர், தனது தந்தையின் நிறுவனத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்த அமீரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். 2006 -ம் ஆண்டு நிறுவனத்திற்காக நிதியை திரட்டினார். மேலும், 2015 -ம் ஆண்டு ரூ.600 கோடி கடன் வாங்கினார்.
சொத்து மதிப்பு எவ்வளவு?
அந்த பணத்தை வைத்து பங்குகளை வாங்கியதால் நல்ல வருமானம் கிடைத்தது. இதனால் அமீரா ஷா , 2022 -ம் ண்டுக்கான ஹுருண் பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றார். மேலும், இந்தியாவின் ஐம்பது மிக சக்திவாய்ந்த பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
அமீரா ஷாவின் நிகர சொத்து மதிப்பு இப்போது ரூ.5,950 கோடி ஆகும். 2019 -ல் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது, இந்நிறுவனம் ஐந்து கோவிட் லேப்களை நடத்திவருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |