பிள்ளைகளுக்குள் நடந்த வாக்குவாதம்: 11 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு
அமெரிக்காவில், பிள்ளைகளுக்குள் நடந்த வாக்குவாதத்தின்போது, ஒரு 11 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட பயங்கரம் நிகழ்ந்தது.
11 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள டெட்ராயிட் நகரில், பூங்கா ஒன்றில் விளையாடிக்கொண்டிருக்கும்போது பிள்ளைகளுக்குள் சண்டை உருவாகியுள்ளது.
Image: WDIV WS
அப்போது, Deaira Summers என்னும் 11 வயது பிள்ளைமீது, 12 பிள்ளை ஒருத்தி ஆசிடை வீசியிருக்கிறாள். பிள்ளையின் உடல் முழுவதிலுமிருந்து புகை வந்ததைக் கண்டு தான் நடுங்கிப் போனதாகத் தெரிவித்துள்ளார் அந்த சிறுமியின் தாய்.
Image: WDIV WS
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் சிறுமி
இதற்கிடையில், அந்த 12 வயது சிறுமியின் தாய் எங்கோ சென்று ஆசிடை எடுத்து வந்து மகளிடம் கொடுத்ததாகவும், அவள் அதை Deaira மீது வீசியதை தான் கண்ணால் கண்டதாகவும், அவளது பாட்டி தெரிவித்துள்ளார்.
Image: WDIV WS
Deaira மீது ஆசிட் வீசப்பட்டதைத் தொடர்ந்து, அச்சம் காரணமாக அந்த குடும்பமே வேறு இடத்துக்கு குடிபெயர இருப்பதாக அவளது பாட்டி தெரிவித்துள்ளார்.
ஆசிட் வீச்சுக்குள்ளான Deairaவின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவளைத் தாக்கிய அந்த 12 வயது சிறுமி நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறாள். அவளுக்கு ஆசிட் கொடுத்த அவளது தாய்க்கும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image: Gofundme
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |