பசுமை விநியோகச் சங்கிலிகளை மாற்றும் அவுஸ்திரேலியா-கனடா-இந்தியா கூட்டணி
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் இந்தியா இணைந்து முக்கிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன.
உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கக் கட்டணங்கள், தடைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், பசுமை தொழில்நுட்பத்திற்கான விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படுகின்றன.
இதை சமாளிக்க அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா இணைந்து ACITI தொழில்நுட்ப கூட்டணியை அறிவித்துள்ளன.
சுத்தமான எரிசக்தி, முக்கிய கனிமங்கள் (லித்தியம், கோபால்ட், நிக்கல், ரேர் எர்த்), நீண்டகால பொருளாதார பாதுகாப்பு ஆகியவை இந்த கூட்டணி முயற்சியின் முக்கிய இலக்குகள் ஆகும்.

அவுஸ்திரேலியா உலகின் முன்னணி லித்தியம் உற்பத்தியாளராக உள்ளது.
அதேநேரத்தில், கனடா பசுமை தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டுவருகிறது.
இந்தியா, 2030-க்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தயாரிக்கும் இலக்கை கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த மூன்று நாடுகளும் ஒரே மாதிரியான நோக்கத்தை பிரதிபலிக்கின்றன.
இந்த கூட்டணி, குறைந்த தாக்கம் கொண்ட சுரங்கம், மறுசீரமைப்பு, நகர்ப்புற சுரங்கம் போன்ற ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. மேலும், லித்தியம், கோபால்ட், நிக்கல், காப்பர் போன்ற கனிமங்களை மறுசுழற்சி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப வளர்ச்சியை இந்த கூட்டணி நாடுகள் முயற்சிக்கின்றன.
AI போன்ற துறைகள், பசுமை மற்றும் சுகாதார தீர்வுகளுக்கான துணை அடுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ACITI அதன் முயற்சிகளை தொடர்ந்து கடைபிடித்தால், அது ஒரு சுத்தமான, நம்பகமான ஆற்றல் எதிர்காலத்திற்கான கட்டிடமைப்பை உருவாக்க முடியும் என நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ACITI trilateral partnership, Australia Canada India tech alliance, green supply chains ACITI, critical minerals cooperation, renewable energy India 2030 target, lithium cobalt rare earths supply, green hydrogen collaboration, climate technology partnership, sustainable energy trilateral, tech alliance for climate action