பெயர், புகழ், பணம் அலைய மாட்டேன்…ஆனால் நடிப்பு முக்கியம்! நடிகை சமந்தா
எனக்கு பெயர், புகழ், பணம் போன்றவை முக்கியமில்லை, நடிப்பது மட்டுமே எனக்கு முக்கியம் என்று மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா உடல்நலக் குறைவு
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சமந்தா, சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவின் மூலம் தான் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால் (autoimmune disorder) பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அத்துடன் தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் சமந்தா குறிப்பிட்டு இருந்தார்.
நடிப்பது முக்கியம்
இந்நிலையில் சமந்தா தனது குணாதிசயங்கள் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எனக்கு பயங்கர கோபம் வரும், அவ்வாறு கோபம் வரும் போது எல்லாம், ஜிம்முக்கு சென்று பயங்கரமாக விளையாடுவேன், உடனே எனக்கு கோபம் குறைந்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் “ எனக்கு பெயர், புகழ், பணம், போன்றவை முக்கியமில்லை, ஆனால் நடிப்பது எனக்கு முக்கியம், நான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசிக்கிறேன், எனக்கு நானே மிகப்பெரிய விமர்சகர், நாம் செய்யும் வேலை நேசிக்க முடியாத போது அதில் எந்தவித சந்தோஷமோ அல்லது பயனோ இருக்காது” என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் நமது தவறுகள் என்னவென்று நாம் அறியும் போது தான் நம்மை வளப்படுத்தி கொள்ள முடியும், காலம் நமக்கு சாதகமாக இல்லாத போது எதுவும் வெற்றிகரமாக கைகூடாது, அதனால் அதை நினைத்து கவலை பட மாட்டேன் அதற்கு மாறாக தூங்கி விடுவேன்,
உலகத்தில் நமக்கென்று இருப்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால் நமக்கு தேவையான அனைத்தும் நம்மை தேடி வரும் என்று சமந்தா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.