சுவிட்சர்லாந்தில் பணியாளர் பற்றாக்குறையால் வேலையில்லாதவர்கள் எடுக்கும் அதிரடி முடிவு...
ஒருபக்கம் பணியாளர் பற்றாக்குறை, மறுபக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் என சுவிட்சர்லாந்தில் நிலவும் சூழல், முற்றிலும் வித்தியாசமான முடிவொன்றை எடுக்க வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைத் தூண்டியுள்ளது.
வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவி செய்யும், ஆனால்...
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வேலையில்லாத்திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு தாராள உதவிகள் செய்யும். ஆனால், வேலை கிடைப்பதற்காக ஒருவர் உண்மையாகவே முயற்சிகள் எடுத்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை அவர் நிரூபித்தாகவேண்டும்.
வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எடுக்கும் முற்றிலும் வித்தியாசமான முடிவு
சுவிட்சர்லாந்தில் 100,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேநேரத்தில், 2022 டிசம்பர் இறுதி நிலவரப்படி சுமார் 96,941 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளார்கள்.
ஆக, ஒருபக்கம் பணியாளர் பற்றாக்குறை, மறுபக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் ஒரு வித்தியாசமான நிலைமை சுவிட்சர்லாந்தில் நிலவுகிறது.
எனவே, வேலையில்லாதோர் ஒரு அதிரடி முடிவை எடுக்கத் துவங்கியுள்ளார்கள். Lausanneஇல் வாழும் அழகியல் கலைஞரான ஒரு இளம்பெண் வேலை கிடைக்கும் என காத்திருந்தும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. ஆனால், மருத்துவத்துறையில் வேலை காலியிருப்பதாகவும், அதற்கு பயிற்சி அளிப்பதாகவும் உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளது.
Photo by cottonbro studio on Pexels.com
வேலைவாய்ப்பு அலுவலகம் இப்படி ஒரு வாய்ப்பை வழங்கும் நிலையில், அவர் அதை தொடர்ந்து மறுப்பாரானால், தடைகள் விதிக்கப்படும் ஒரு அபாயம் உள்ளதையும், வேலையின்மைக் காப்பீடு கிடைக்கும் வாய்ப்பை இழக்கும் நிலைமையும் உள்ளதால், வேறு வழியில்லாமல், தான் கற்ற அழகியல் கலையை விட்டுவிட்டு, மருத்துவத்துறையில் வேலை கிடைப்பதற்காக பயிற்சி மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
ஆக, சுவிட்சர்லாந்தில் வேலையில்லாத்திண்டாட்டத்தால் அவதியுறும் பலரும், வேறு வழியில்லாமல், தாங்கள் கற்ற தொழிற்கல்வியை விட்டு விட்டு, அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத வேறு வேலைகளைச் செய்யும் முடிவை எடுக்கும் நிர்ப்பந்ததுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.