இர்ஃபான் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இர்ஃபான் தனது மனைவியின் பிரசவத்தின் போது தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இர்ஃபான் மீது நடவடிக்கை
பிரபல யூடியூபர் இர்ஃபான், சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் ஸ்கேன் எடுத்து அறிவித்தார்.
பாலினத்தை அறிவிப்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய புகார்கள் வந்தது. ஆனால், அவர் மன்னிப்பு கூறியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தனது மனைவியின் பிரவசத்தில் அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்.
இந்த விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை இர்பான் மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இர்பான் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் இர்பான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |