மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை... சக ஊழியர்கள் பலரை சுட்டுக்கொன்ற நபரால் பரபரப்பு
அமெரிக்காவின் சேன் ஜோஸ் நகரில் சக ஊழியர்கள் 8 பேர்களை சுட்டுக் கொன்று தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ரயில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர்.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை சுமார் 6.45 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் 57 வயதுடைய Samuel Cassidy என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு முன்னர் தமது முன்னாள் மனைவி Cecilia Nelms என்பவரிடம் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
ஆனால், உண்மையில் அவர் அவ்வாறு நடந்து கொள்வார் என்பதை தாம் அப்போது நம்பவில்லை என்கிறார் Cecilia Nelms.
மட்டுமின்றி சம்பவத்திற்கு முன்னர் Samuel Cassidy தனது குடியிருப்புக்கு நெருப்பு வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், சம்பவப்பகுதிக்கு சென்று சேரும் சில நிமிடங்கள் முன்னர் Samuel Cassidy தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது சடலங்களை அடையாளம் காணும் பணிகள் துவங்கியுள்ளதுடன், தொடர்புடைய குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.