காதலியின் கண் முன்னே காதலனின் இதயத்தில் கத்தியால் குத்திய மர்ம நபர்: அமெரிக்காவில் அரங்கேறிய பயங்கரம்
அமெரிக்காவில் சமூக ஆர்வலரான ரியான் கார்சன் தன் காதலி கண் முன்பு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர் நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கிரவுன் ஹைட்ஸ் தெருவில் சமூக ஆர்வலரான ரியான் கார்சன் தன் காதலி கண் முன்னே மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் ரியான் கார்சனும், அவரின் காதலியும் அதிகாலை 4 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றுள்ளனர்.
New York Daily News/TNS
அப்போது அவர்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் காரணமின்றி நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டரை காலால் எட்டி உதைத்து சலசலப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதனை ரியான் கார்சன் பார்த்த போது, கார்சனை நோக்கி அந்த நபர் வந்து “என்ன பார்க்கிறாய்” என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.
இதையடுத்து திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ரியான் கார்சனின் மார்பில் பலமுறை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
NYPD
உயிரிழந்த ரியான் கார்சன்
இந்நிலையில் கிங்ஸ் கவுண்ட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரியான் கார்சன், இதயத்தில் கத்தி துளைத்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கருப்பு சட்டை அணிந்து இருந்த மர்ம நபரின் புகைப்படங்களை எடுத்து, அதை சாலைகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் போஸ்டர்களாக பொலிஸார் ஒட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |