லண்டனை உலுக்கிய தீவிர வலதுசாரிகளின் பேரணி... தாக்குதலுக்கு இலக்கான பொலிசார்
தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றிலேயே
லண்டனை உலுக்கிய அந்த பேரணியில் சுமார் 110,000 பேர்கள் கலந்துகொண்டுள்ளனர். Whitehall பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்த மோதலில், பொலிசார் தாக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட மொத்தம் 1600 பொலிசார் லண்டனில் களமிறக்கப்பட்டிருந்தனர். பிரித்தானிய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவென குறிப்பிட்ட ராபின்சன், பிரித்தானியாவை ஒன்றிணைக்கும் போராட்டம் இதுவென தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராபின்சனின் பேரணிக்கு எதிராக Diane Abbott மற்றும் Zarah Sultana ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
ராபின்சன் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக லண்டனில் குடியிருக்கும் இஸ்லாமிய மக்கள் இன்றைய தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டாம் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
லண்டனுக்குள் இஸ்லாமியர்கல் நுழைய வேண்டாம் என அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலேயே, கமாண்டர் கிளேர் ஹேய்ன்ஸ் விளக்கமளித்துள்ளார். லண்டனுக்குள் மற்றும் அதைச் சுற்றிப் பயணம் செய்வதில் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும்.
பாசிசத்திற்கு எதிரான
அதை உறுதி செய்ய எங்கள் அதிகாரிகள் இருக்கிறார்கள், சனிக்கிழமை வெளியில் இருப்பவர்கள் மற்றும் ஏதும் அசம்பாவிதங்களை எதிர்கொள்ள நேரிடுபவர்கள் லண்டன் பொலிசாருடன் பேசுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராபின்சனின் பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இன்று காலை வாட்டர்லூ பாலத்திற்கு அருகிலுள்ள ஸ்டாம்ஃபோர்ட் தெருவை வந்து சேர்ந்தனர், மேலும் அவர்கள் வைட்ஹாலுக்கு பேரணியாகச் சென்றனர்.
இதனிடையே, பாசிசத்திற்கு எதிரான போராட்டமும் ஒருபக்கம் முன்னெடுக்கப்பட்டது. Stephen Christopher Yaxley-Lennon என்ற டாமி ராபின்சன் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர் மற்றும் பிரித்தானியாவின் மிக முக்கியமான தீவிர வலதுசாரி ஆர்வலர்களில் ஒருவர்.
ராபின்சன் தன்னை அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஒரு பத்திரிகையாளராகக் கூறிக்கொண்டு, எலோன் மஸ்க்கை தனது ஆதரவாளர்களில் ஒருவராகக் குறிப்பிடுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |