ரஷ்ய எண்ணெய் விவகாரம்... G7 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரவிருக்கும் பேரிடி
ரஷ்யப் போருக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தடையும் வரியும் விதிப்பது குறித்து G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
G7 நாடுகளும்
இப்படியான முடிவு, மலிவு விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பேரிடியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் இந்த விவகாரத்தில் இந்தியா மீது நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று G7 நாடுகளும் அதே நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
கனேடிய நிதியமைச்சகமே இப்படியான ஒரு நகர்வு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க G7 நிதி அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினர்.
தற்போதைய தலைமை பொறுப்பில் இருக்கும் கனடா இந்த விவகாரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க பல்வேறு சாத்தியமான பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர்.
பொருளாதாரத் தடைகள், வரி விதிப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யப் போர் விவகாரத்தில் பல வகையில் ஆதரப்பிவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |