வெளிநாட்டில் இந்திய இளம்பெண் பிச்சை எடுப்பதை கண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர்! அடுத்து அவரை வியக்க வைத்த ஒரு விடயம்.. வீடியோ
இந்தியாவை சேர்ந்த இளம்பெண்ணொருவர் நேபாளத்தில் பிச்சை எடுத்து வந்த நிலையில் அவரின் ஆங்கில புலமையை கண்டு பிரபல நடிகர் வியப்பில் ஆழ்ந்தார்.
தமிழில் வி.ஐ.பி, காதலர் தினம், லிட்டில் ஜான், குற்றப்பரம்பரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் அனுபம் கேர். இவர் ஏராளமான இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நேபாள நாட்டின் காத்மண்டுவுக்கு சமீபத்தில் சென்றிருந்த போது சாலையில் பிச்சையெடுக்கும் இளம்பெண் ஒருவரை பார்த்தார். அந்த இளம்பெண் அனுபம் கேரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை கண்டு அவர் வாய்பிளந்து போனார்.
இது தொடர்பான வீடியோவை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நான் காத்மண்டுவில் உள்ள கோவில் வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த ஆர்த்தி என்ற பெண்னை சந்தித்தேன்.
Mr anupam kher a renowned indian actor decided to help a needy girl through his foundation this girl is in the right hands . pic.twitter.com/kZZH1Vydzj
— aryansmiles (@aryansmiles) November 4, 2021
அவர் என்னிடம் சரளமான ஆங்கிலத்தில் பேசினார், என்னிடம் பணம் கேட்டதோடு தான் படிக்க விரும்புவதாக கூறினார் என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் இளம்பெண் ஆங்கிலத்தில் பேசுகையில், நான் இந்தியாவின் ராஜ்ஸ்தானை சேர்ந்தவள். நான் பிச்சை எடுக்கிறேன், பள்ளிக்கு செல்லவில்லை.
இங்கு எனக்கு யாருமே வேலை கொடுக்க மாட்டேன் என்கின்றனர். நீ இந்தியர், எதற்காக இங்கு வந்தாய் என கேட்கின்றனர். நான் பள்ளிக்கு போனால் என் வாழ்க்கை மாறும் என பேசுகிறார்.
அனுபம் கேர் அந்த இளம்பெண்ணின் போன் நம்பரை வாங்கி வைத்து கொண்ட நிலையில் நிச்சயம் உதவுவதாக உறுதியளித்துள்ளார்.