6 வயது சிறுமியிடம் அத்துமீறல்! தமிழ் நகைச்சுவை நடிகர் கைது
வடிவேலுவின் எலி படத்தில் துணை நடிகராக நடித்தவர் ராஜு
சிறுமியிடம் அத்துமீறலால் போக்சோ சட்டத்தின் கீழ் எலி ராஜு கைது
சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நகைச்சுவை நடிகர் எலி ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. நடிகர் வடிவேலுவின் எலி படத்தில் துணை நடிகராக நடித்த இவர், மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவரது வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
எலி ராஜு தன்னிடம் அத்துமீறியதாக குறித்த சிறுமி தனது பெற்றோரிடம் கூற, உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் எலி ராஜு கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.