டாப் கன்: மேவ்ரிக் நட்சத்திர நடிகர் ஜேம்ஸ் ஹேண்டி கொலை: 44 வயது இளைஞர் கைது
டாப் கன்: மேவ்ரிக் திரைப்படத்தில் நடித்த பிரபல மூத்த நடிகர் ஜேம்ஸ் ஹேண்டி காலமானது திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த நடிகர் ஜேம்ஸ் ஹேண்டி காலமானார்
கடந்த புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸின் டார்சானா பகுதியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் மூத்த நடிகர் ஜேம்ஸ் ஹேண்டி மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.
சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

மூத்த நடிகரான ஜேம்ஸ் ஹேண்டி கடந்த 5 தசாப்தங்களாக Jumanji, Top Gun Maverick போன்ற திரைப்படங்கலில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.
குற்றவாளி கைது
இந்த சம்பவத்தில் 44 வயது மைக்கேல் கிட்ஹில் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜேம்ஸ் ஹேண்டியின் தோழியின் மகனான மைக்கேல் சம்பவ இடத்திற்கு தானே வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறை சம்பவம் தனிப்பட்ட விவகாரம் என்றும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லை என்று பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |