நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’-ஐ தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்! என்ன காரணம்?
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி நடிகர் மன்சூர் அலிகான் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார்.
எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சியில் வாய்ப்பு கொடுக்காததால் மன்சூர் அலிகான் அக்கட்சியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
தற்போது நடிகர் மன்சூர் அலிகான் தமிழ்த் தேசிய புலிகள் கட்சி எனும் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சியில் இருந்து என் கட்சியில் சேர எவனாவது வந்தால் நானே உதைப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 54957 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
