ஒரு காலத்தில் இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகர்: இன்று அவரின் நிலை?
ஒரு காலத்தில் இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த ஒரே நடிகராக இருந்த நெப்போலியனை ஞாபகம் இருக்கின்றதா? அவர் தற்போது என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
நடிகர் நெப்போலியன்
திருச்சியை பிறப்பிடமாக் கொண்ட இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி. இவர் அவருடைய குடும்பத்தில் 5 ஆவது குழந்தை.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தனது படிப்பை ஆரம்பித்தார். அவருக்கு 27 வயதாகும் போது சினிமாவில் நடிப்பதற்கான ஆசை ஏற்பட்டது.
எனவே அவருக்கு 29 வயதாகும் போது 1991ல் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமாகினார். அதையடுத்து கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சின்ன தாயி, இது நம்ம பூமி, ஊர் மரியாதை, பங்காளி, தர்ம சீலன், மறவன், எஜமான், எட்டுப்பட்டி ராசா, சுயம்வரம், அய்யா என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவே" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த காலத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.
பின் 2009 ஆம் ஆண்டு அரசியலிற்கு வருகை தந்தார். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
பின் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இவரருக்கு தனுஷ் மற்றும் குனால் என இரு மகன்கள் உள்ளனர்.
அவருடைய மூத்த மகனான தனுஷ் தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளவர். தனது மகனை போல கஷ்டப்படுபவர்களுக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
மகனின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசியலை விட்டு தள்ளி, குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றார்.
தற்போது இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் அமெரிக்காவில் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் நெப்போலியன்
அமெரிக்காவில் சொந்தமாக ஒரு கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு 300 ஏக்கர் பண்ணையும் வைத்துள்ளார்.
மேலும் இவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் 65 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கலைமாமணி மற்றும் எம்.ஜி.ஆர் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |