குழந்தைகளை பலியாக்காதீர்கள்! கரூர் துயரம் குறித்து நடிகர் பார்த்திபன் வேதனை
கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகத்தையை உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பார்த்திபன் வெளியிட்ட இரங்கல் பதிவில், "ஒட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க! அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்!" என தெரிவித்துள்ளார்.
‘கூட்டம்’ என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்….
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 28, 2025
10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி,(இருந்தால்) உறவினர்களின் கண்ணீர்… pic.twitter.com/tQY2bKpnmv
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |