''அயோத்தி ராமர் கோயில் திறப்பு அரசியல் அல்ல''- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் அயோத்திக்கு நேற்று வந்திருந்தனர்.
தனது மனைவி லதாவோடு அயோத்தி வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த், கோயிலில் இருந்து திரும்பும்போது செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் "இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். ஆண்டுதோறும் அயோத்திக்கு நிச்சயம் வருவேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அயோத்தியில் இருந்து தனது குடும்பத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் கூறியதாவது..,
"ராமர் கோயில் திறந்தபோது அதை நேரில் பார்த்தவர்களில் நானும் ஒவருன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதை அரசியல் நிகழ்வாக நான் பார்க்கவில்லை. ஆன்மிகமாகதான் பார்க்கிறேன். ஒவ்வொருவருடைய கருத்து இதில் மாறுபடலாம். நான் இதை ஆன்மிகம் என்று சொல்வேன்.
என் குடும்பத்திற்காக விஐபி இருக்கைக்கு பேசினேன் என்று சொல்கிறார்கள், அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |