தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட முக்கிய அறிக்கை!
புதிய கட்சி தொடங்கியிருக்கும் அர்ஜூன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் பின்னர் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரபோவதில்லை என அறிவித்தார்.
அவர் முதலில் அரசியலுக்கு வருவதாக கூறிய போது தான் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்பவர் இருப்பார் என கூறினார். பின்னரே ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார்.
இந்த நிலையில் அர்ஜுன மூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார்.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், தனி அரசியல் கட்சித் தொடங்கியிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி கூறுகையில், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும் போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
