பயங்கரவாதிகள் கடல் வழியாக புகுந்து..ரஜினிகாந்தின் திடீர் வீடியோ
சிஐஎஸ்எப் வீரர்கள் தமிழகத்திற்கு வரும்போது, தமிழக கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் வரவேற்க வேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
மிதிவண்டி பேரணி
சிஐஎஸ்எப் (CISF) எனும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை மிதிவண்டி பேரணி நடத்துகிறது.
கடலோர பாதுகாப்பை மேம்படுத்தவும், பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பேரணி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் கொல்கத்தாவின் 50 வீரர்களும், குஜராத் துறைமுகத்தில் இருந்து 50 வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் ஒன்றுகூடுகின்றனர்.
கடலோர மக்களுக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் வீடியோ#CISF #Rajinikanth pic.twitter.com/tUKE6sNUXW
— Thanthi TV (@ThanthiTV) March 23, 2025
ரஜினிகாந்த்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள்.
அதற்கு உதாரணம் மும்பையில் 26-11யில் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை பாலி வாங்கிடுச்சு. கடலோர பகுதியில் வாழும் மக்கள், விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், சிஐஎஸ்எப் வீரர்கள் தமிழகத்திற்கு வரும்போது, தமிழக கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் அவர்களை வரவேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |