தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியான விஜய்யின் தவெக: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரிய வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக
தமிழக சட்டசபை தேர்தலில் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 105 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து
இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
— Rajinikanth (@rajinikanth) May 4, 2026
அந்த பதிவில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |