தொலைபேசியால் தாக்கியதால் 6 மணிநேர சிறை: 20 ஆண்டுகால மௌனத்தை கலைத்த பிரபலம்
ஹாலிவுட் நடிகர் ரஸ்ஸல் குரோவ் நியூயார்க்கில் தொலைபேசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
ரஸ்ஸல் குரோவ்
கிளாடியேட்டர் பட புகழ் ரஸ்ஸல் குரோவ் (Russell Crowe) 2005ஆம் ஆண்டில் நியூயார்க்கின் சொகுசு ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
அப்போது தனது படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் இருந்த அவர், அவுஸ்திரேலியாவில் உள்ள தமது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொள்ள நினைத்தார்.
ஆனால், தனது அறையில் இருந்த தொலைபேசியால் மனைவியை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் வரவேற்பறைக்கு சென்ற ரஸ்ஸல், அங்கிருந்த ஊழியர் மீது தொலைபேசியை வீசி தாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ரஸ்ஸல் குரோவ், கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அவர் 6 மணிநேரம் சிறையில் கழித்தார்.
பின்னர் மூன்றாம் நிலை குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர் சிறை தண்டனையைத் தவிர்த்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்
இதுதொடர்பான விவரங்கள் ரகசியமாக இருந்தாலும், தாக்கப்பட்ட ஊழியருக்கு ரஸ்ஸல் சுமார் 100,000 டொலர்கள் கொடுத்தாக அறியப்படுகிறது.
இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் குறித்து ரஸ்ஸல் குரோவ் மௌனம் கலைத்துள்ளார்.
ரஸ்ஸல் குரோவ், "இந்த 61 வயதில் என் கெட்ட நாட்களை என்னால் மன்னிக்க முடியும். வருத்தப்படக்கூடாது என்று கூறுபவர்களில் நான் ஒருவன் அல்ல, நான் வருத்தத்தை முற்றிலும் மதிக்கிறேன். வருத்தம் என்பது மிகப்பெரிய செயல்முறைகளில் ஒன்றாகும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், வயது ஆக ஆக புத்திசாலியாக வளர்ந்துள்ளதாகவும், இப்போது தான் அப்போதையதை விட சிறந்த மனிதராக மாறிவிட்டதாகவும், அதற்கு பிறகு பல ஆண்டுகளில் தன்னை சரிபடுத்திக் கொண்டு, தன்னை கண்டுபிடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |