தனியொருவனாக... புடினுக்கு எழுதிய கடிதத்தில் மெலனியா ட்ரம்ப் உருக்கம்
உக்ரைன் போரில் சிறார்களின் அவலநிலை குறித்து அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அமைதி கோரும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
போரின் தாக்கம்
குறித்த கடிதத்தில் உக்ரைன் போரில் சிறார்களின் அவலநிலை குறித்தும் அவர்களின் அப்பாவித்தனத்தைப் பாதுகாக்கவும் புடினை வலியுறுத்தியுள்ளார். சனிக்கிழமை அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி ட்ரம்ப் அந்த கடிதத்தை புடினிடம் நேரிடையாக வழங்கினார்.
Our incredible First Lady @MELANIATRUMP shared this powerful, deeply moving letter with President Putin. She speaks from the heart of every American in calling for a world where children, regardless of where they are born, can live in peace. pic.twitter.com/Soqrv1euAm
— Attorney General Pamela Bondi (@AGPamBondi) August 16, 2025
உக்ரைனின் பெயரைக் குறிப்பிடாமல், குழந்தைகளில் ஏற்படுத்தும் போரின் தாக்கத்தை திருமதி ட்ரம்ப் எடுத்துரைத்தார், மேலும் ஒவ்வொரு குழந்தையும் அன்பு, சாத்தியம் மற்றும் ஆபத்திலிருந்து பாதுகாப்பைக் கனவு காண்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெற்றோர்களாக, அடுத்த தலைமுறையின் நம்பிக்கையை வளர்ப்பது நமது கடமை. தலைவர்களாக, நம் குழந்தைகளைப் பேணுவதற்கான பொறுப்பு ஒரு சிலரின் ஆறுதலுக்கு அப்பாற்பட்டது என்றும் மெலனியா பதிவு செய்துள்ளார்.
தனியொருவனாக
மட்டுமின்றி, இந்த நிலையை மொத்தமாக இல்லாமல் செய்ய தனியொருவனாக செயல்பட முடியும் என்றும் மெலனியா புடினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் படையெடுப்பின் போது குழந்தைகளை கடத்துவதாகவும், 18 வயது நிரம்பியதும் அவர்களை இராணுவ சேவையில் கட்டாயப்படுத்துவதாகவும், சொந்த மக்களுக்கு எதிராகப் போராட அனுப்புவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து மெலனியா தற்போது இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |