உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை
அலாஸ்காவில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சந்திப்புக்கு பின்னர், ட்ரம்பும் புடினும் பத்திரிகையாளர்களை சந்திக்க, உக்ரௌன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி பரவலாக கேட்கப்பட்டுள்ளது.
அவமானப்படுத்திய ட்ரம்ப்
உக்ரைனில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை புடின் எப்போது நிறுத்துவார் என்ற கேள்விக்கு, ரஷ்ய ஜனாதிபதி தலையை ஆட்டியுள்ளார். உக்ரைன் தொடர்பில் மட்டுமே பல கேள்விகள் கேட்கப்பட்டதும் புடின் குழப்பமான முகபாவனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே வேளை ட்ரம்ப் அமைதியாகவே காணப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை கேள்விகளால் துளைத்து, பேச விடாமல் மிரட்டி அவமானப்படுத்திய ட்ரம்ப் இந்த முறை புடினுடன் எந்த சலனமும் இன்றி பணிவுடனே காணப்பட்டுள்ளார்.
அலாஸ்கா சந்திப்பின் போது புடினின் செய்கைகள் கவனத்தை ஈர்த்தது ஒருமுறை அல்ல. ட்ரம்புடனான உரையாடலின் போது புடின் விசித்திரமாக நடுங்குவதை சில உக்ரேனியர்கள் கவனித்துள்ளனர்.
புடினின் முழங்கால்
கூட்டு செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, ட்ரம்புடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த புடினின் முழங்கால் மீண்டும் மீண்டும் நடுங்குவதைக் காணொளிகள் படம் பிடித்துள்ளன.
பாதுகாப்பு வட்டத்தில் இருந்து விலகி, அதிகாரிகள் எவரும் அருகில் இல்லாமல், இரு தலைவர்களும் சில நிமிடங்கள் தனியாகப் பேசியுள்ளனர். புடினின் விசித்திர செய்கைகள், அவரது உடல் நிலை குறித்த ஊகங்களை உறுதி செய்துள்ளதாகவே உக்ரைன் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் போர் தொடர்பில் எந்த ஒப்பந்தமும் எட்டாமல் இரு தலைவர்களும் வெளியேறியுள்ள நிலையில், பல விடயங்களில் இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்தது என்றும், ஆனால் ஒரு விடயம், மிக முக்கியமானது, அது தீர்க்கப்படாமல் உள்ளது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |