பிரபல நடிகர் சைஃப் அலி கானை வீடுபுகுந்து 6 முறை கத்தியால் குத்திய மர்ம நபர்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் வீட்டிற்குள் புகுந்த நபர், கொள்ளையடிக்கும் முயற்சியின்போது அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைஃப் அலி கான். இவர் நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தெலுங்கில் 'தேவரா' திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திருடும் முயற்சியில் சைஃப் அலி கானை தாக்கியுள்ளார். அந்த நபர் சைஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
தடுக்க முயற்சித்த மனைவி கரீனா கபூருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபர் தப்பியோட, சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |