புற்றுநோயிலிருந்து குணமடைந்த பிரித்தானிய பிரபலம் அவுஸ்திரேலியாவில் காலமானார்
ஜுராசிக் பார்க் படப்புகழ் நடிகர் சாம் நீல் அவுஸ்திரேலியாவில் காலமானார்.
சாம் நீல்
1975ஆம் ஆண்டில் வெளியான Landfall என்ற நியூஸிலாந்து திரைப்படத்தில் அறிமுகமானவர் சாம் நீல் (Sam Neill).
வடக்கு அயர்லாந்தின் Omagh-யில் பிறந்த நடிகர் சாம் நீல் (Sam Neil), நியூஸிலாந்திற்கு குடிபெயர்ந்த பின் நடிகராகவும், தொழிலதிபதிராகவும் உருவெடுத்தார்.
1993யில் வெளியான ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற சாம் நீல் கலைப்படங்கள் முதல் ஹாலிவுட்டின் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
78வது வயதில்
சாம் நீல் சமீபத்தில் இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து குணமடைந்திருந்தார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 78வது வயதில் சாம் நீல் காலமானார். அவரது இறப்பை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அவரது மரணம் திடீரெனவும், எதிர்பாராத விதமாகவும் நிகழ்ந்ததாகவும் சாம் நீலின் குடும்பத்தினர் விவரித்தனர்.
மேலும், அவரது இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கும் வேளையில், தங்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |