பொலிஸைக் கண்டு தப்பியோடிய பிரபல நடிகர்: வீடியோ வைரலான நிலையில் கைது
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மலையாள நடிகர்
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்தவர் ஷைன் டாம் சாக்கோ. பிரபல மலையாள நடிகரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் கொச்சியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடிச்சென்றனர்.
அப்போது ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பியோடினார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
அதன் பின்னர் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த பெண்ணிடம் விசாரித்தபோது, தப்பியோடியது ஷைன் டாம் சாக்கோதான் என்பது உறுதியானது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்த பொலிஸார், ஷைன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுத்தனர்.
போதைப்பொருள் வழக்கு
இந்த நிலையில், கொச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஷைன் டாம் சாக்கோ நேரில் ஆஜரானார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தனது வளர்ச்சி பிடிக்காதவர்கள் தாக்க வருவதாக நினைத்து ஓடியதாக கூறியுள்ளார்.
எனினும், அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போதைப்பொருள் வியாபாரி சஜீருடன் ரூ.20,000 பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
ஆனால் தான் போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என ஷைன் கூறினார். எனினும் அந்நபரை தெரியும் என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஷைன் மீது NDPS சட்டத்தின் பிரிவுகள் 27 மற்றும் 29யின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்த பிறகு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |