போச்சா... 5-ல் 4 காலியா? மோடியை மறைமுகாக கிண்டல் செய்த நடிகர் சித்தார்த்: சற்று முன் பதிவிட்ட டுவிட்
பிரபல திரைப்பட நடிகரான சித்தார்த் வாக்கு எண்ணிக்கையின் முடிவை வைத்து மோடியை கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்துள்ளார்.
இந்தியாவில், இன்று அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி என ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தில் 234 தொகுதிகளில், 12 மணி நிலவரப்படி திமுக 117 இடங்களிலும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
அதே போன்று மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில், மம்தா பேனர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 199 இடங்களிலும், பாஜா கூட்டணி 79 இடங்களில், இதர இடங்களில் பிற கட்சிகளும் கூட்டணியில் உள்ளது.
மூன்றாவதாக அஸ்ஸாமில் 126 தொகுதிகளில் பாஜககூட்டணி 62 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும், நான்காவதாக புதுச்சேரியில் பாஜா கூட்டணி பின்னடைவையும், கேரளாவில் பின்னடைவையும் சந்தித்துள்ளது.
Modiiii...Ohhh Modiiii... #Elections2021
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021
இதனால் மொத்தம் 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி, அஸ்ஸாமில் மற்றுமே முன்னிலையிலும், மற்ற மாநிலங்களிலும் பின்னணியில் உள்ளது.
இதனால் இதை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Modiiii...Ohhh Modiiii... #Elections2021 என்று குறிப்பிட்டுள்ளார்.