சாய்னாவுக்கு ஆபாச வார்த்தை பயன்படுத்தி டுவிட்டரில் பதில்! பெரும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்தார்த்
இந்திய பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நாவால் சொன்ன கருத்திற்கு நடிகர் சித்தார் போட்ட பதில் டுவிட் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், பஞ்சாப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு குறைபாடு காரணமாக, மோடி பஞ்சாப்பிற்கு செல்லாமல், இடையிலே திரும்பிவிட்டார். இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக இந்திய உள்துறை கருதியுள்ளதால், சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மாநில அரசு, இந்திய உள்துறை, உச்ச நீதிமன்றம் ஆகியவை தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றன.
Subtle cock champion of the world... Thank God we have protectors of India. ??
— Siddharth (@Actor_Siddharth) January 6, 2022
Shame on you #Rihanna https://t.co/FpIJjl1Gxz
இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாநாவால் இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
மோடி மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என கூறி #BharatStandsWithModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட் செய்திருந்தார். இதற்கு பிரபல திரைப்பட நடிகரான சித்தார்த், ஆபாசமாக பொருள் கொள்ளும் படி வார்த்தையை பயன்படுத்தி பதில் அளித்திருந்தார்.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சித்தார்த் மீண்டும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தவறான நோக்கத்தில் தான் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்ததாக விளக்கம் அளித்திருந்தார்.
"COCK & BULL"
— Siddharth (@Actor_Siddharth) January 10, 2022
That's the reference. Reading otherwise is unfair and leading!
Nothing disrespectful was intended, said or insinuated. Period. ??
ஆனால், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தற்போது தலையிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்து நடிகர் சித்தார்த்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கும் படி டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.