நடிகர் ஸ்ரீக்கு இப்படி ஒரு நோய் உள்ளதா? தோழி சொன்ன அதிர்ச்சி தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ.
அதன் பின்னர், 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பரிதாப தோற்றத்தில் நடிகர் ஸ்ரீ
அதைத்தொடர்ந்து, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, சோன் பப்படி, மாநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இதனையடுத்து பிக்பாஸ் தொடரில் கலந்து கொண்ட அவர், அதிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று படத்திற்கு பின்னர் அவர் சினிமாவில் தலை காட்டவில்லை.
சமீபத்தில், எலும்பும் தோலுமான உடல், கலரிங் செய்யப்பட்ட முடி என ஸ்ரீ அடையாளமே தெரியாமல் மாறியிருந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ஸ்ரீக்கு என ஆச்சு என கேள்வி எழுப்பினர். அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஸ்கிசோஃப்ரினியா
இந்நிலையில் ஸ்ரீ க்கு ஸ்கிசோஃப்ரினியா பாதிப்பு இருந்ததாக அவரது தோழி டாட்டி டேவிட் தெரிவித்துள்ளார். ஸ்ரீ குறித்து பேசிய அவர், "ஸ்ரீ எல்லோரிடமும் ஜாலியாக பழகக்கூடியவர். ஆனால், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு அவர் பொதுவெளியில் வருவதை விரும்பவில்லை.
4 சுவர்களுக்குள் தன்னை அடைத்துக்கொண்டார். நாங்கள் போன் செய்தாலும் எடுப்பதில்லை. பிக்பாஸ் சென்ற அவரால், அங்கு இருக்க முடியாமல் வெளியேறினார்.
அதன்பிறகு பேசிய அவர்,தான் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். நம்மை போல் இல்லமால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
வில் அம்பு படத்தில் நடித்தது மற்றும் பிக் பாஸ்ஸில் கலந்து கொண்டதற்கு தனக்கு வர வேண்டிய ஊதியம் வரவில்லை என கூறியிருந்தார். அதன் பின்னர் கேமரா முன் நின்று நடிக்க பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
மயக்கம் என்ன படத்தில் தனுஷுக்கு இருந்த ஸ்கிசோஃப்ரினியா(schizophrenia) பிரச்சனை அவருக்கு இருந்தது. அவர் போதைக்கு அடிமையாகவிட்டார் என்ற வதந்தியை பரப்ப வேண்டாம். அவருக்கு சிகரெட் பழக்கம் மட்டுமே உள்ளது. அசைவம் கூட சாப்பிடமாட்டார். அவர் LGBTQ பிரிவினராக இருக்க வாய்ப்பு இல்லை" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |