எல்லாம் கொடுத்த அம்மாவுக்கு நான் எதுவுமே பண்ணல..! தாயின் மரணம் குறித்து கதறிய தமிழ் நடிகர்

Actors A. L. Vijay
By Sivaraj Jul 24, 2022 03:48 PM GMT
Report

மறைந்த தனது தாய்க்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என நடிகர் உதயா கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

பிரபல தமிழ்ப்பட இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாய் வள்ளியம்மை சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் ஏ.எல்.விஜய்யின் அண்ணனும், நடிகருமான உதயா தாயின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், 'அம்மா என்றாலே தெய்வத்திற்கு சமமானவர் தான். ஆனால், எங்களுக்கு இன்னும் ஒருபடி மேல். நான் உட்பட விஜய், தங்கை மூவரையும் ஒரேமாதிரி தான் நடத்துவார். என்னை செந்தில் என்றே அழைப்பார். நடிக்க வேண்டும் என்ற ஆசையை முதலில் அம்மாவிடம் தான் சொன்னேன். அவரே அப்பாவை சம்மதிக்க வைத்து நான் நடிகனாக காரணமாக இருந்தார்.

நடிக்கத் தொடங்கியதில் இருந்து, 22 ஆண்டுகளாக எனக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், ஊக்கமாகவும் இருந்தது அம்மா தான். அவர் தான் நீ நிச்சயம் பெரிய அளவில் ஜெயிப்பாய் என்று என்னிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். நான் பெரிய வெற்றியை அடைந்துவிட வேண்டும் என அவர் போகாத கோயில் இல்லை, செய்யாத பிரார்த்தனைகள் இல்லை. தம்பி விஜய் போன்று சினிமா மூலம் பொருளாதார ரீதியாக அம்மாவுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும், அம்மா கை காட்டிய பெண்ணையே திருமணம் செய்தேன்.

எல்லாம் கொடுத்த அம்மாவுக்கு நான் எதுவுமே பண்ணல..! தாயின் மரணம் குறித்து கதறிய தமிழ் நடிகர் | Actor Udhaya Sad Post For His Mother

அம்மாவிற்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும், அதிகமாக பாசத்தையும் அன்பையும் கொடுத்தேன். ஆனால், அதையும் கூட அம்மா எனக்கு பல மடங்கு அதிகமாக திருப்பித் தந்துள்ளார். அம்மாவின் உடல்நிலை முடியாமல் போனபோதெல்லாம், மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவர் மீண்டு வந்தார்.

அப்போதெல்லாம் நீ வெற்றிப் பெறுவதை பார்க்காமல் நான் போய் விடமாட்டேன் என புன்னகை மலர கூறி என்னை தட்டிக் கொடுத்தார். She is a Fighter, ஆனால் யாருமே எதிர்ப்பார்க்காத போது, எங்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார். எனக்கு பாசத்தை பெரிதாக வெளிப்படுத்த தெரியாது என்ற போதும், அம்மா இறப்பதற்கு முன் அவரிடம் நிறைய பேசினேன். அப்போதும் அவர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

அவர் போய் விட்டால் தான் அனாதை என்று உறவினரிடம் சொன்னபோது, அப்படியெல்லாம் உன்னை விட்டு செல்லமாட்டேன் என்று அம்மா நம்பிக்கையோடு கூறினார். ஆனால் இன்று அவர் எங்களுடன் இல்லை' என தெரிவித்துள்ளார்.

Udhaya

மேலும் அவர், 'ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக அம்மா திகழ்ந்தார். வீட்டுக்கு வரும் யாரும் சாப்பிடாமல் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார்.

அந்த அன்பின் காரணமாக, அம்மா இறந்ததும் எங்கெங்கிருந்தோ எல்லாம் வந்த ஏராளாமானோர், அவருக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர். அப்பா, நான், விஜய், தங்கை என வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட எங்கள் நால்வரையும் தாங்கிப் பிடித்தது அம்மா தான்' என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.       

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US