நல்லா இருக்கும் தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு! நல்லதே நடக்கும்... மீண்டும் நடிகர் வடிவேலு
தமிழக முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார் நடிகர் வடிவேலு.
தமிழ் திரையுலகில் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அந்த தேர்தலில் திமுக படுதோல்வியடைந்த நிலையில் வடிவேலுக்கு சினிமா வாய்ப்பு மங்க தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக சில படங்களில் மட்டுமே நடித்த வடிவேலு பெரும்பாலும் தனது சொந்த ஊரான மதுரையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இன்று வடிவேலு சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினேன் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு திட்டங்களையும் அழகாக நிறைவேற்றி வரும் பொற்கால ஆட்சி இது. நல்லா இருக்க தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு, நான் அரசியல் பேசல, இதெல்லாம் கேட்கும் போது தலை சுத்துது.
அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மீண்டும் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என கூறினார்.