கடந்த முறை மாணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு.., இந்த முறை மருத்துவ முகாம்: விஜயின் ஏற்பாடு
விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி விருது விழா
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழா நடைபெற்று வருகிறது.
அப்போது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று பேசினார்.
மருத்துவ முகாம்
இந்நிலையில், முதற்கட்ட நிகழ்ச்சியை போலவே இன்றும் அரங்கத்திற்கு செல்ஃபோன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், குடிநீர், பிஸ்கட் ஆகியவை கொடுக்கப்பட்டு மாணவர்களை வரவேற்றனர்.
இதில், கடந்த முறை மாணவர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.
இதனால், இந்த முறை நிகழ்வு நடக்கும் அரங்கில் தவெக சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதோடு, நிகழ்வுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |