நடிகர் விஜயுடன் கனிமொழி அரசியல் பேசினாரா? அவர் கொடுத்த விளக்கம்
நடிகர் விஜயுடன் அரசியல் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததா என எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
போனில் பேசிய விஜய்
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக கடந்த 5 -ம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.
அப்போது, சில அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் நடிகர் விஜய் கனிமொழி எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் பரஸ்பரமாக பேசிக் கொண்டனர்.
அரசியல் பேசப்பட்டதா?
நடிகர் விஜயுடன் தொலைபேசியில் பேசப்பட்டது குறித்து கனிமொழி கூறுகையில், "அவர் எனக்கு எப்போதும் போல பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவ்வளவு தான், வேறு எதுவும் இல்லை.
முக்கியமாக நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. தூத்துக்குடி வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதால் வேறு விடயங்களில் கவனம் செலுத்தவில்லை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |