2 நிமிட Google Meet தான்.. ஒரே நேரத்தில் 200 பேர் பணிநீக்கம்: பின்னணியில் இருக்கும் காரணம்
2 நிமிட கூகுள் மீட்டிங்கில் 200 பணியாளர்களை தனியார் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Google Meet
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் தான் ஃப்ரன்ட் டெஸ்க் (FrontDesk). இந்நிறுவனம் சொத்துக்கள் தொடர்புடைய தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் 1000 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
2017 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய பல சொத்து தொடர்பான நிறுவனங்கள் சுமார் ரூ. 200 கோடியில் முதலீடு செய்துள்ளன.
LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% வேலை வாய்ப்பு: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு நிபந்தனை
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் 200 ஊழியர்களை Google Meet மூலமாக தொடர்பு கொண்டனர்.
200 பேர் பணிநீக்கம்
அப்போது, 200 பணியாளர்களையும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர். இவர்களில் முழு நேர, பகுதிநேர, ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இவர்கள் நிறுவனத்திற்கு லாபத்தை ஏற்படுத்தி தர தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலை இழந்த பணியாளர்கள் தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
FrontDesk நிறுவனம் தொடங்கிய நாள்களில் இருந்து சில ஆண்டுகள் வரை லாபத்துடன் செயல்பட்ட நிலையில், சில மாதங்களாக லாபத்தை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் பல கிளை அலுவலகங்களுக்கு வாடகை தொகை கடந்த சில மாதங்களாக வழங்கவில்லை.
இதனால், அதன் உரிமையாளர்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டதால் FrontDesk நிறுவனம் நெருக்கடியை சந்தித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |