விஜய் கல்வி விருது விழா வாசலில் கண்ணீர் விட்டு அழுத மாணவி
பிளஸ்-2 தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர் நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விதமாக நடிகர் விஜய் தலைமையில் அவரது ரசிகர் மன்றமான தளபதி விஜய் மக்கள் இயக்கம் 'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா'வை இன்று நடத்தியது.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
மாணவ மாணவிகளுக்கு விஜய் தனிப்பட்டமுறையில் பொன்னாடை போர்த்தி, கைகுலுக்கி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசு அட்டையையும் வழங்கினார்.
இந்த விழாவுக்காக நடிகர் விஜய் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த விழா தொடர்பிலான செய்திகள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளன.
இந்நிலையில், விழா நடந்த அரங்கத்திற்கு வெளியே ஒரு மாணவி, பிளஸ்-2 தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த என்னை விழாவிற்கு அழைக்கவில்லை என வேதனையுடன் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
விழா ஏற்பாட்டாளர்கள் சிலர் அவர்களுக்கு எல்லாம் திட்டமிட்டபடி சரியாக ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் அனைத்து மாணவர்களின் பட்டியலையும் பெற்று அதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த முதல் மூன்று மாணவர்களை தொடர்பு கொண்டு சரியாகத்தான் மாண்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என கூறினர்.
ஆனால், தனது மதிப்பெண்ணின்படி தனது தொகுதியில் தான் மூன்றாவது இடத்தையாவது பிடித்திருப்பேன், ஆனால் என்னை இந்த விழாவிற்கு அழைக்கவில்லை என பெற்றோர்களுடன் வந்து கேட்டுள்ளார்.
யாரிடமிருந்தும் எந்த அழைப்பும் வரவில்லை என்றவுடன், இது குறித்து தெரிவிக்க விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்திற்கு போன் செய்தோம், மெயில் சேய்தோம், இணையதளத்தில் மெஸேஜ் செய்தொம் என கூறுகிறார் மாணவி.
இறுதியில், விழா ஏற்பாட்டாளர்கள், மாணவியை இரண்டு நாட்கள் கழித்து பனையூர் அலுவலகத்திற்கு சென்று நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டுக்கொள்ளுமாறு மாணவியை வாசலோடு அனுப்பிவைத்தனர்.
இது விழா ஏற்பாட்டாளர்களின் தவறா அல்லது குறித்த மாணவி தொகுதி அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடிக்கவில்லையா என்பது இதுவரை விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Actor Vijay, Thalapathy Vijay, Thalapathy Vijay Makkal Iyakkam, Vijay Birthday, Thalapathy Vijay Education Award Ceremony