பிரபல நடிகரின் மனைவி அதிர்ச்சி மரணம்! திருமணநாளை கொண்டாடவிருந்த நிலையில் நேர்ந்த சோகம்
பிரபல கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகர்
தாய்லாந்தில் கன்னடத்தில் பிரபலமான நடிகர் விஜய் ராகவேந்திரா தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.
அங்கு அவரது மனைவி ஸ்பந்தனாவுக்கு திடீர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்பந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மனைவியின் மரணம்
திருமண நாளை கொண்டாட 19 நாட்களே இருந்த நிலையில் விஜய் ராகவேந்திராவின் மனைவி உயிரிழந்துள்ளார்.
இது விஜய் ராகவேந்திராவின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |