விஜயகாந்த் கடைசி வரை ஓட்டு போட வரவில்லையே! என்ன காரணம்? நிறைவடைந்த வாக்குப் பதிவு
தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் ஓட்டு போட கடைசி வரை வராததால், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறைக்கு சென்று திரும்பிய சசிகலாவின் பெயர் வாக்காள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அவர் வாக்களிக்க வரவில்லை.
இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவரான விஜயகாந்த் இன்று வாக்களிக்க வரவில்லை. அவர் மாலை நேரத்திலோ அல்லது கடைசி நேரத்திலோ வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அவர் வரவில்லை, தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, விஜயகாந்த் நல்ல நிலையில் காணப்பட்டார். அவர் அமமுக தலைவர் தினகரனை சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகிய நிலையில், அவர் ஏன் வாக்களிக்க வரவில்லை என்று கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.