வீல்சேரில் 3 ஆண்டுகள்.,23 அறுவை சிகிச்சை..இன்று தமிழில் உச்ச நடிகர்
தமிழில் முன்னணி நடிகராக உள்ள சியான் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
உச்ச நடிகர்
தமிழ் திரைப்பட உலகில் கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் சென்று உடல் மெலிந்து, உடல் எடையை கூட்டி மிரள வைக்கும் நடிராக இருப்பவர் விக்ரம்.
58 வயதான விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காகவும் உடலை வருத்தி விக்ரம் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகரான விக்ரம், முன்னணி நடிகராக மாறுவதற்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். அப்போது அவர் கிட்டத்தட்ட தனது காலினை இழக்கும் சூழல் ஏற்பட்டது. அதற்காக அவர் 23 அறுவை சிகிச்சைகளை தனது காலில் மேற்கொண்டார்.
வீல்சேரில் வாழ்க்கை
அதன் பின்னர் அவர் மூன்று ஆண்டுகள் வீல் சேரிலேயே வாழ்க்கையை கழித்து மீண்டு வந்தார். 'சேது' திரைப்படம் அவரை திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது.
அதனைத் தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி, அந்நியன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.
சொகுசு கார்கள்
தனது 33 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், விக்ரம் தற்போது முன்னணி நடிகராகவே உள்ளார்.
விக்ரமின் சொத்து மதிப்பு 20 மில்லியன் டொலர்கள் என்று கூறப்படுகிறது. சினிமாவைத் தாண்டி வேறு சில தொழில்களிலும் முதலீடு செய்து விக்ரம் வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் Porsche 922 Turbo, Toyota Land Crusier, Audi A4, Audi R8 ஆகிய சொகுசு கார்களை விக்ரம் வைத்துள்ளாராம்.