இந்த விடயத்தை மட்டும் என்னிடம் கேட்காதீங்க.., ரஜினிகாந்த் கூறியது என்ன?
விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இந்தக் கேள்வி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பிய ரஜினி
'லால் சலாம்’ படம் வெளியானதை அடுத்து வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிசியாக உள்ளார். அதற்காக தெலங்கானா மாநிலம் சென்றிருந்த ரஜினிகாந்த் அங்கிருந்து திரும்பி சென்னைக்கு வந்தார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், லால் சலாம் வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "லால் சலாம் படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்வி பட்டேன். அதற்காக இயக்குநர் ஐஸ்வர்யா மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதை மட்டும் கேட்காதீங்க
மேலும் பேசிய அவரிடம், நடிகர் விஜயை அடுத்து நடிகர் விஷாலும் கட்சி தொடங்க உள்ளார். நடிகர்கள் இப்படி முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். முதலமைச்சர் பதவி இலகுவானதா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், “சாரி, இந்தக் கேள்வி இப்போதைக்கு வேண்டாம்" என்று அப்செட்டில் பேசினார். மேலும் அவர், "வேட்டையன் படப்பிடிப்பு 80 % முடிந்துவிட்டது. இதன் பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படம் ஆரம்பிக்கும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |