அவரு கூடவே இருக்கணும்னு தோணும், இல்லங்கறத நம்ப முடியல! மாரிமுத்து குறித்து நடிகர் விஷால் வேதனை
மறைந்து இயக்குநர்-நடிகர் மாரிமுத்து குறித்து நடிகர் விஷால் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் மாரிமுத்து உடல் நல்லடக்கம்
மாரடைப்பால் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஷால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது மாரிமுத்துவின் இறப்பு செய்தி வந்தது.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஷால் அரங்கில் இருந்தவர்களுடன் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாரிமுத்து குறித்து உருக்கத்துடன் பேசினார்.
மாரிமுத்து சார் கடைசிநாள் கூட சிரிச்சி பேசிட்டு இருந்தார்.. ஆனா Freezerல அவர பார்த்தப்போ.. கண்கலங்கியபடி பேசிய நடிகை
விஷால் உருக்கம்
அவருடன் நடித்த அனுபவம் குறித்து விஷால் கூறுகையில், 'மாரிமுத்து அவர்களை ரொம்ப வருஷமா தெரியும். அவர் எனக்கு கதை சொல்லிருக்கிறார். எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். கூடவே பயணித்திருக்கிறோம். அவர் நல்ல இதயம் கொண்ட நலம் விரும்பி. சினிமா சார்ந்து பல விடயங்களிலும் என்னை பாராட்டியிருக்கிறார்.
விவேக் சார், மயில்சாமி அண்ணன்னு ஒவ்வொருத்தரா நம்மள விட்டு போகும்போது அதை ஏத்துக்க கொஞ்ச காலம் தேவைப்படுது. இனிமை நம்ம மத்தியில ஒருத்தர் இருக்கப்போறது இல்லனு நினைக்கும்போது..என்னால ஏதும் பேச முடியல.
அவரு குடும்பத்துக்கு கடவுள் பக்கபலமாக இருந்து தாங்கும் சக்தியை கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். ஒரு நல்ல நடிகரை நாம் இழந்துவிட்டோம்' என வேதனை தெரிவித்தார்.
மேலும் குறித்து பேசிய அவர், 'மாரிமுத்து ஒரு இயல்பான நடிகர். அவர் நடிக்காமல் அந்த கேரக்டராக நடந்துகொள்வார். அவர் பெர்சனலாவும் நெறைய விடயங்கள் பேசிட்டே இருப்பார். எப்போது கட்டிடம் வரும், எப்போ கல்யாணம், நீங்கள் எடுத்த முயற்சி நல்லாருக்கு சார்..ரொம்ப பெருமையா இருக்கு சார்னு சொல்வார்.
நிறைய விடயங்கள் அவர் கேள்விப்படும்போது பாராட்டுவார். அவர் கூடவே இருக்கணும்னு தோணும், அந்த அளவுக்கு பாசிடிவ் ஆன மனிதர். இன்னைக்கு அவர் இல்லங்கறது நம்ப முடியல. நம் வாழ்க்கை கணிக்க முடியாதது' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |